இந்நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழலுக்குப் பின் இத்தலத்திற்கு கடல்வழி செல்பவர்கள், முதலில் பௌத்தகோயில் தளத்தை நோக்கி படகு செல்லவேண்டும் என்றும், அதன் பின்னரே நாகபூஷணி அம்பாள் இறங்குதுறைக்கு செல்ல வேண்டும் என கடற்படையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். நாக விகாரைக்கு செல்லும் யாத்திரிகர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன நாகவிகாரை இறங்குதுறையை நோக்கி வள்ளங்கள் செல்வது இன்று வழக்கமாகிவிட்டது. என் செய்வது எம் தலைவிதியை யார்தான் காப்பாற்றுவார்கள். நாக விகாரைக்கு உரிய இறங்குதுறை நவீனமயப்படுத்தப்பட்டு பல இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சைவ சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் பாரிய தொடர்புகள் இருந்தாலும் இன்று சைவசமயத்தவர்களுக்குரிய ஆலயங்களை பாதுகாப்பதில் சில சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. நயினாதீவில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்பாளிடம் வழிபாடு செய்யச் செல்லும் பக்தர்களுக்கு வருடம் 365நாட்களும் உணவு வசதி, தங்குமிடவசதி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். நயினாதீவில் உள்ள மடங்கள் எவ்வித மத பேதமின்றி அனைவருக்கும் உணவு பரிமாறி தங்குவதற்கு வாய்ப்பு கொடுப்பது மனிதாபிமானம்மிக்க பணியாகும். இப்பண்பாடு நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நயினாதீவில் வாழ்ந்த சைவமக்களில் பெருந்தொகையானோர் அவ்வூரை
விட்டு புறப்பட்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று குடியேறி வருகின்றனர். திருவிழாக்காலங்களில் தமது ஊருக்கு வந்து செல்கிறார்கள். நயினாதீவில்
இருந்த குடிசன அடர்த்தி மிகவும் குறைந்துள்ளது. இவ்விடயத்தில் சைவமக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
நயினாதீவு தொடர்பான பல நூல்கள் காலத்துக்கு காலம் அறிஞர்களால்
வெளியிடப்பட்டுள்ளது. அமரர் குலசபாநாதன் முதல் பல அறிஞர்கள் இத்திருத்தலத்தின் சிறப்புக்கள் பற்றி எடுத்துரைத்திருந்த போதிலும் நயினாதீவு பற்றிய முழுமையான ஆராய்ச்சி இதுவரை வெளிவரவில்லை என்றே உணரமுடிகின்றது.நயினாதீவு தொடர்பான பூரணமான ஓர் ஆராய்ச்சியை பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ந்து வெளியிடவேண்டியது அவசியமாகும். பௌத்தர்கள் நயினாதீவு தொடர்பாக பல்வேறு நூல்களை தொடர்ந்து வெளியிட்டுவருவதாக அறியமுடிகிறது. வரலாறுகள் திரிவுபடாமல் பாதுகாக்க வேண்டியது கற்றோர் கடமையாகும்.

COMMENTS