முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு பிள்ளையார் வழித்துணைப் பிள்ளையாராக வீற்றிருக்கிறார். இவ்வாலயத்தைக் கடந்தே, வடபகுதியை அடைய முடியும். எனவே, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ்வாலயத்தில் தரித்து நின்று, பிள்ளையாரை வழிபட்ட பின்னரே, தம் பயணத்தைத் தொடருவர்.
மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு.
அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே இவ்விநாயகர் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.
COMMENTS