"அவனின்றி அணுவும் அசையாது" என்பர். பஞ்ச பூதங்களாலான இப் பிரபஞ்சமா னது அணுத்துணிக்கைகளின் சேர்க்கை யினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அணுக்களின் சேரலிலும் பிரிதலிலும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுவதிலும் அபரிமித விளைவுகள் ஏற்படுத்தப் படுகின்றன. அணுக் கருவினைச் சுற்றி பல அணுத்துணிக்கைகள் நகர்ந்தவண்ணம் இருக்கும். கருவினை மையமாகக் கொண்ட இவ் அணுத்துணிக்கைகளின் நகர்வானது "அணுத்துகள்களின் நடனங்கள்" (dances of subatomic particles) எனப்படுகின்றது.
இங்கே நடனம் என்னும் சொல்லானது தத்துவரீதியாக கையாளப்பட்டுள்ளது. அதாவது அணு மூலக்கூறுகளின் இடைத் தொடர்பாடலானது இவ்வாறு விளக்கப்பட் டுள்ளது. இதன் அடிப்படையிலேயே சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான - சேர்ன் (the European Organization for Nuclear Research - – CERN) ஆராய்ச்சி வளாகத்தில் நடராஜர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 2 மீற்றர் உயரமான இச் சிலையானது 1960ஆம் ஆண்டு முதல் தொடர்கின்ற இந்திய அரசாங்கத்துடனான விஞ்ஞான ஆய்வுகளின் நல்லுறவிற்காக இந்திய அரசாங்கத்தினால் அன்ப ளிப்பாக வழங்கப்பட்டது.
இச்சிலையானது 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி அன்றய CERN இயக்குநர் டாக்டர்் ரொபர்ட் WTO--–Geneva தூதுவர் சந்திரசேகர், மற்றும் இந்திய அணுசக்தி ஆணையக செயலாளார் டாக்டர் அனில் காக்கோதார் ஆகியோரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இச்சிலையானது மெழுகு மாதிரியினால் உருவாக்கப்பட்டு களி மண் அச்சினால் சூழப்பட்டு பின்னர் அம்மெழுகானது உருக்கப்பட்டவுடன் அவ்விடத்தில் தோன்றும் வெற்றிடமானது திரவ உலோகத்தினால் நிரப்பப்படும். பின்னர் இது குளிரூட்டப்பட்டவுடன் மேற் சூழ்ந்துள்ள களிமண் அச்சு அகன்றுவிடும். பின்னர் சிலையானது மெருகூட்டப்பட்டு முழுமையாக்கப்பட்டுள்ளது.
CERN ஆராய்ச்சி மையத்தின் சில அடிப்படை அறிவியல் விளக்கங்களைப் பார்ப்போமானால் அணுவின் கருவினுள்ளே (nucleus) புரோத்தன்கள் மற்றும் நியுத்திரன்கள் ஆகிய கூறுகள் காணப்படும். இக் கூறுகள் குவார்க்குள் (quarks) என்றழைக்கப்படும் துகள்களினால் ஆக்கப்பட்டிருக்கும். இக் குவார்க்குளில் சில ஏனைய பிரபஞ்சங்களிலிருந்து அதிவேகத்துடன் பூமியை வந்தடைந்தி ருக்கும். சில குவார்க்குகள் அணுக்கள் ஒன்றோடொன்று மோதியதால் உருவாக்கப் பட்டிருக்கும். விஞ்ஞானிகள் இவை பற்றிய விடயங்களை அறிவதற்கான துரிதப்படுத்தி (accelerator) என்னும் கருவிப் பொறிமுறையை உருவாக்கியுள்ளனர். இக் கருவிப் பொறி முறையினுள் அணுத் துகள்கள் ஒரே திசை யிலும் எதிர்த்திசையிலும் வெவ் வேறு வேகங்களில் மோத விடப்பட்டு (collisions) எவ்வாறான விளைவுகள் உருவாக் கப்படுகின்றன என அவதானிக்கப் படுகின்றது. அத்துடன் இச் செயன்முறை யினால் பல புதிய அணுக்கூறுகள் உருவாக் கப்படுவதுடன் சில பழைய அணுக்கூறுகள் அழிக்கப்படுகின்றன. CERN ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள துரிதப்படுத்தியே (accelerator) உலகிலுள்ள மிகப் பெரிய துரிதப்படுத்தியாகும். இது Large Hadron Collider(LHC) என அழைக்கப்படுகின்றது. நிலத்திலிருந்து 50 மீற்றர் ஆழமான சுரங்கத்துள் 27 கீலோ மீற்றர் சுற்றளவில் இது அமைக்கப்பட் டுள்ளது.
CERN LHC access points இவை பற்றிய ஆய்வுகள் மிக நுணுக் கமானவையும் சிக்கல் நிறைந்தவையு மாதலால் உலகெங்கிலுமுள்ள பல ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இவ் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின் றனர். 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் CERN மையத்துடன் செய்து கொண்ட ஒப்பந் தத்தின் அடிப்படையில் இலங்கைப் பல் கலைக் கழகங்களிலிருந்து பேராசிரியர்கள் ஆய்வுகளில் பங்குகொள்வது மட்டுமன்றி விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் கல் விகற்கும் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அணுத்துணிக்கைகளின் இடைத் தொடர் பாடலின் போது புதியன உருவாக்கப்படு கின்றன. பழையன அழிக்கப்படுகின்றன. நடராஜர் திருவடிவத்தினூடாக விளக்கப்படும் படைத்தலும் அழித்தலும் இவ்வாறே அறிவியலில் விளக்கப்படுகின்றது. அத்துடன் இத் தொழிற்பாடுகளின் போது பெருமளவு சக்திப் பரிமாற்றம் நிகழ்கின்றது. மேலும் CERN மையத்தின் "பிக் பாங்க்" (big bang)என்னும் மற்றுமொரு கற்கையின் படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அமைந்துள்ள பல நட்சத்திர மண்டலங்கள் (galaxies) ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.
இவ்விளைவானது பல வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் உருவானது என கருதப்படுகின்றது. இவ்வாறு அணுத் துணிக்கையிலிருந்து பிரபஞ்சத்தின் அசை வுகள் பற்றிய அறிவியலின் அடிப்படை யிலேயே அவனின்றி அணுவும் அசையாது என்பதன் ஆழமான தத்துவத்தை நடராஜர் திருவுருவம் விளக்கி நிற்கின்றது.
வலது கால் ஊன்றி இடது கால் தூக்கி சாத்வீக ராஜரீகத்தின் சொரூபமாக விளங்கும் நடராஜர் என்னும் பதத்தின் அர்த்தம் நடனத்தின் அரசன் என்பதாகின்றது. தாண்டவம், லாஸ்யம் என்பன இதன் இரு நடன வடிவங்களாகும். தாண்டவம் என்பது உக்கிர நடன வடிவமாக அழித்தலுடன் தொடர்புற லாஸ்யம் மென்மையானதாக படைத்தலை விளக்குகின்றது. எனவே இங்கே புதியதொன்றை உருவாக்கவே அழித்தல் இடம்பெறுகின்றது. ஆத்மாவின் மனம் புத்தி சம்ஸ்காரங்களில் புதைந்துள்ள அனைத்து விகாரங்களையும் அகற்றவே பரமாத்மா சிவன் ஞான நடனமாடுகின்றார் என்பது ஆன்மீக சாரமாகும்.
நடராஜத் திருவடிவின் குணாம்சங்கள்
1. நெருப்புச் சுவாலைகளினால் ஆன வட்டம் பிரபஞ்சத்தினுள்ளே இயக்கங்கள் அனைத்தும் நடைபெறுவதையும் நெருப் பிலிருந்து உருவாதலையும் அழித்தல் இடம் பெறுவதையும் குறிக்கின்றது. நெருப்பானது இங்கு வெப்பம், ஒளி, சக்தி என வாழ்வின் குதூகலமாகவும் பிரதிபலிக்கின்றது.
2. டமருகம் (உடுக்கை) தாங்கிய தூக்கிய வலக்கரம்
காலப்பிரமாணம், நேரம் என - வாழ்க்கையின் கணப்பொழுதுகளிலேயே மங்களம், மரணம் இரண்டும் நிகழ்கின்றன. காலப்பிரமாணம் கற்பிக்கும் வாழ்க்கையின் அனுபவத்தை நாம் எங்கும் கற்க முடியாது.
3. நெருப்பினைத் தாங்கிய இடக்கரம்
படைப்பினதும் அழித்தலினதும் சக்தி மற்றும் வாழ்வில் நாம் முகம் கொடுக்கும் எதிர்நிலைகள்
4. பாம்பினால் சூழப்பட்ட வலது அபயக்கரம்
உன்னைச் சுற்றியுள்ள தீய சக்திகளாலும் அறியாமையினாலும் அஞ்சாதே என்பதை விளக்குகின்றது.
5. தூக்கிய திருவடியினைக் காட்டி நிற்கும் இடதுகரம்
சிவனின் உயர்ந்த வழிகாட்டல்களை பின்பற்றுவதால் ஆன்ம ஈடேற்றமும் பந்தனங்களிலிருந்து விடுதலையும் கிடைப்பதைக் குறிக்கின்றது.
6. அசுரனின் மீது ஊன்றிய திருவடியும் தூக்கிய திருவடியும்
விகாரங்கள் (vices) அறியாமை (ignorance) மற்றும் மாயாவின் (illusions) மீதான வெற்றி. அத்துடன் தாமரை மலரில் திருப்பாதங்களை ஊன்றியும் தூக்கியும் இருப்பது நமது வாழ்வெனும் சம்சார சாகரத்தை நாம் அன்புடனும் பற்றற்றும் கடக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
7. விரிந்த சடாமுடி
ஆனந்த நடனத்தினால் நாம் உணரும் எல்லையற்ற பேரானந்தத்தின் விஸ்தாரம்.
8. சடையில் தாங்கிய கங்கா
உயிர்களின் ஜீவாதாரத்தையும் புனர் ஜென்மத்தையும் குறிக்கும் நீர்.
9. இரு கண்கள், நெற்றியில் அமைந்துள்ள மூன்றாவது கண்
இருகண்கள் சூரிய சந்திரர்களையும் மூன்றாவது கண் சுய விழிப்புணர்வினால் ஒருவர் உணர வேண்டிய ஞானத்தையும் (wisdom) குறிக்கின்றது. மேலும் சதோ ரஜோ தமோ குணங்களையும் கருதுகின்றது.
10. புன்னகை தவழும் கம்பீரமான வதனம்
பிரபஞ்சத்தில் வாழும் உயிருள்ள ஜீவசக்திகளினதும் பஞ்சபூதங்களின் செயற்கோலங்களையும் அனைத்தையும் அறிந்தும் அறியாமலும் பற்றற்ற பார்வையாளராக (detachment) பார்க்கும் நிலை.
இக் குணாம்சங்களோடும் தத்துவங்களோடும் அக்கினியையும் டமருகத்தையும் கைகளில் ஏந்தி அரவம் சுற்றிய கை அபயமளிக்க தூக்கிய திருவடியினை மறு கை காட்டி நிற்க முயலகன் என்னும் அசுரனின் மீது வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி சலங்கைகள் அணிந்து முக்கண் திறந்து விரிந்த சடையுடன் புன்னகை தவழ தீச்சுவாலைகள் சூழ உலகின் முழுமுதல் கடவுளான சிவன் படைத்தல் (Creation), காத்தல் (Preservation), அழித்தல் (Destruction) , மறைத்தல்(llusion),அருளல் (Grace) என்னும் ஐந்தியக்கங்களையும் நடராஜராக ஆனந்த தாண்டவமாடுன்றார் (cosmic dance of Shiva) என ஞானிகள் விளக்குகின்றனர். இவ்வாறு இந்நடன தத்துவம் அழகியல் கலைஞர்களால் அற்புத நடனமாக ஆடப்படுகின்றது. ''நடனம் ஆன்மாவில் மறைந்திருக்கும் மொழி'', இவ்வாறு மார்தா கிரகம் (1894 –- 1991)என்னும் அமெரிக்க நவீன நடனக்கலைஞர் தாம் நாட்டியத்தினால் அனுபவித்த சுகானுபவத்தை குறிப்பிட்டுச் சென்றார். உற்று நோக்கின் இக்கலையின் மூலம் மனித மனங்களிடையேயும் இயற்கையிடையேயுமான பரஸ்பர பராமரிப்பின் அத்தியாவசியத்தை அறிவியல் சான்றுகளினால் ஆதாரப்படுத்துகின்றது. தற்காலங்களில் சில கலைஞர்கள் ஆன்மிக தாரணைகளை அலட்சியம் செய்யும் சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் அவர்கள் காமம், பேராசை, பொறாமை என்பவற்றினால் தாக்கப்பட்டு கலையின் ஆன்மிக தூய்மையினை இழந்து விடுகின்றனர். அத்தகையவர்களின் கலைப்படைப்பினால் தற்காலிகமான லௌகீக பேறுகளை அடையலாமேயன்றி நிரந்தரமான அலௌகீகப் பேறுகளை அடைவது சாத்தியமாகாது. அத்துடன் மனித மனமும் இயற்கையும் அதன் இயல்பான பயணப்பாதையை விட்டுத் தவறுவதை கலையானது சுட்டிக்காட்டாது விட்டால் அல்லது பரஸ்பரம் நல்லுறவினைப் பேணாது விட்டால் கலையானது அது அடைய வேண்டிய அதியுயர் இலக்கைவிட்டு தடம் மாறிச் செல்கின்றது என உணர்ந்து கொள்ளலாம்.
"கலைகள் வெறும் கலைகளே என்றனர் சிலர். வேறு சிலர், கலைகள் வாழ்க்கைக்காகவே என்றனர். சந்தோஷத்தையும் களிப்பையும் வாழ்வில் தூண்டுதலையும் ஏற்படுத்தாவிட்டால் அது கலை இல்லை என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். மற்றும் சிலர் கலைகள் சமுதாயத்திற்காகவே என்றனர். அவை சமூக நலன்களுக்காகப் பயன்பட வேண்டும் என்றனர். கலைகள் சமூக தரத்தின் வீழ்ச்சியினையும் அதன் யதார்த்த நிலையினையும் ெவளிப்படுத்தாவிட்டால், மக்களை அரசியல், பொருளாதார, சமுதாய அடிமைத்தனங்களிலிருந்தும், அநீதி மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான சவால்கள் போன்றவற்றிலிருந்தும் சுதந்திரம் அடைவதற்கான உந்துதலை வழங்காவிட்டால், அவை தமது உண்மையான நோக்கத்தை ெவளிப்படுத்தவில்லை என்பதே அதன் அர்த்தம்.
-பி.கு.ஜெகதீஷ் சந்தர் ஹசிஜா (1921-–2001) ராஜ யோகி, எழுத்தாளர் – - இந்தியா
(``Some have said that Art is for art sake. Others have emphasized that art is for life. if it does not give enjoyment, entertainment and inspiration to life, it is not Art. Still others have said that Art is for society. It should work for social good. If it does not reflect the failings and true state of the society and does not inspire people to liberate themselves from political, economic or social slavery from injustice and inhumanity, it does not serve its purpose.``
- BK Jegdish Chander Hassija (1921-–2001) Raja yoga teacher, writer- India)
இன்றைய காலகட்டங்களில் அறிவியல் ரீதியில் ஒன்றை ஆராய்ந்து பார்த்து அதனை ஏற்றுக் கொள்வது பொதுவான விடயம். அது பலரை பல வழிகளில் சிந்திக்கவும் தூண்டுகின்றது. அவ்வகையில் அறிவியலும் ஆன் மீகமும் உணர்த்தும் சிவபெருமா னின் ஆனந்த நடனத் தத்துவங்கள் என்றுமில்லாதவாறு இன்று காலச்சக்கரம் சவால் விடுகின்ற அதிஉயர்ந்த மனித விழுமியங்களை கட்டியெழுப்புவதன் மூலம் சுய விழிப்புணர்வுடன் சமூக நலனை யும் கருத்தில் கொள்ளவே.
(Information source – Prof.Dr.M.Kithsiri Jayananda, University of Colombo, CERN website, books of BK Jegdish Chander Hassija, & self-analysis by Thushyanthy Velauthan)
துஷ்யந்தி வேலாயுதன்
COMMENTS